சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: போலீஸாரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சாத்தான்குளத்தில் போலீசாரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.
இதில், சாத்தான்குளம் காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து வழக்கை பிப்ரவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.