15W ஃபாஸ்ட் சார்ஜிங்... வாட்டர்டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் கேலக்ஸி ஏ12 அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ வரிசையில் புதிய மாதிரியான கேலக்ஸி ஏ12 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ, ரியல்மீ 7, ஆப்போ ஏ52 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இது திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 128 ஜிபி சேமிப்பளவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பின்புறம் நான்கு காமிராக்கள் கொண்டது. பிப்ரவரி 17ம் தேதி முதல் சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் இது விற்பனையாகும்.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.5 அங்குலம் எச்டி+ (720X1600 பிக்ஸல்), டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளேஇயக்கவேகம்: 4 ஜிபிசேமிப்பளவு: 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1 டிபி வரை உயர்த்தலாம்)முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 5 எம்பி + 2 எம்பி + 2 எம்பிபிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ பி35 SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; ஒன் யூஐ கோர் 2.5மின்கலம்: 5000 mAhசார்ஜிங்: 15W

சாம்சங் கேலக்ஸி ஏ12யின் 4ஜிபி+128 ஸ்மார்ட்போன் ரூ.12,999/- ரூபாய் விலையிலும், 4 ஜிபி+128 ஜிபி போன் ரூ.13,999/- விலையிலும் கிடைக்கும்.ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகை உள்ளது.

More News >>