12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ல் துவக்கம்
கொரானா தொற்று பரவல் காரணமாக முழுமையாக வகுப்புகள் நடத்தப்படாத நிலையில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.அதே சமயம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று காலை திடீரென தேர்வுத்துறை இயக்கம் இயக்கம் 12ஆம் வகுப்புக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதன்படி,
மே 3 மொழி பாடம்மே 5 ஆங்கிலம்மே 7 கணினி அறிவியல் மே 11 இயற்பியல் பொருளாதாரம் மே 17 கணிதம் வணிகவியல் விலங்கியல்மே 19 உயிரியல் தாவரவியல் வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் ,வரலாறுமே 21 வேதியியல் கணக்குப்பதிவியல் புவியியல் தேர்வு நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது.