தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்வு அட்டவணையை வெளியிட்டது ஏன் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.10 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும் என்று அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை கூறி வந்தார்.இந்நிலையில் மே 3 ம் தேதி தொடங்கி 21 ம் தேதி வரை 12 ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,தேர்வு அட்டவணையை தயார் நிலையில் வைத்து இருந்தோம். நேற்று துறை சார்பாக முதலமைச்சரிடம் ஆலோசனை செய்தோம். சிபி.எஸ் இ அட்டவணை வெளியிடபட்டுவிட்டது. இதன் பிறகு நாம் தாமதப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துதான் அறிவித்துள்ளோம்.தேர்தல் தேதி அறிவிக்கட்டும் என்றுதான் காலதாமதம் செய்து வந்தோம். அதேசமயம் தேர்வு கால அட்டவணையை சரியாக போட்டு வைத்து இருந்ததால் வெளியிட்டோம். இதில் குழப்பம் தேவை இல்லை.
தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து வரும் 23 ம் தேதி முதலமைச்சருடன் கலந்து முடிவு எடுக்கப்படும்.10 ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.