12 வருடத்துக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்..
நகைச்சுவை மட்டுமல்லாமல் இம்சை அரசன் 23ம் புலிக் கேசி, எலி, தெனாலி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருப்பவர் வடிவேலு. கடைசியாக விஜய்யின் மெர்சல் படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வடிவேலு.இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். கடைகுட்டி சிங்கத்தின் மூலம் கார்த்திக்கிற்கு வெற்றிப் படம் அளித்த பாண்டியராஜ் தற்போது சூர்யாவுடன் கைகோர்க்கிறார். டி இமான் இசை அமைக்கிறார். இது சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இப்படத்தில் சூரியாவுடன் வடிவேலு நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் நகைச்சுவையுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.பாண்டிராஜ் சமீபத்தில் வடிவேலுவை அவரது இல்லத்தில் சந்தித்து, படம் பற்றி அவரிடம் பேசி படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றார் என்று கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் வெளியான கே.எஸ். ரவிக் குமாரின் ஆதவன் படத்தில் வடிவேலு இதற்கு முன்பு சூர்யாவுடன் பணியாற்றினார். அவர்களின் காட்சிகள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது 12 வருடத்துக்குப் பிறகு சூர்யாவுடன் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளார்.நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும். இப்படம் பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில் இருந்துதான் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடக்கும். மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகள் அதுவரை படமாக்கப்படும்.ஒரு குடும்ப கதையாக இப்படம் உருவாகிறது. கார்த்தியின் கடைகுட்டி சிங்கம் வரிசையில் இப்படமும் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் சூர்யா கொரோனா தொற்றுக்குள்ளானார்.கொரோனா வைரஸ்குள்ளான சூர்யா கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்ற பிறகு குணம் அடைந்து சூர்யா வீடு திரும்பியுள்ளார், அவர் உடல் நலமுடன் இருக்கிறார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், அவர் சில நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார். பாண்டி ராஜின் படத்தை முடித்த பின்னரே வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். நவராசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்திலும் சூர்யா நடித்திருக்கிறார். கடைசியாகச் சூரரைப்போற்று படத்தில் நடித்தார் சூர்யா.