அகமதாபாத் டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா? மூன்று டெஸ்ட்டில் தடை கேட்கும் நியூசிலாந்து மாஜி வீரர்!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்து முடிந்தன. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதன் மூலம் தொடரானது 1-1 என்ற சமநிலையை அடைந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் முதல் போட்டியில் தோற்றதற்கான பழியை தீர்த்து கொண்டது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் , அக்சர் வீசிய பந்து அவரது பேடில் பட்டதால் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டு கள நடுவராக இருந்த நிதின் மேனனிடம் முறையிட்டனர். ஆனால் நிதின் மேனன் பந்து பேட் மற்றும் பேடில் பட்டதா என்ற சந்தேகத்தில் விக்கெட் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய கேப்டன் விராத் கோலி டிஆர்ஸ் முறைக்குச் சென்றார்.
டிஆர்எஸ் முறையில் பார்த்தபோது பாதி பந்து பேட்டிலும், பேடிலும் படுவது போலவே தெரிந்தது. இதனால் மூன்றாவது நடுவர் அதன் முடிவைக் கள நடுவரிடமே விட்டு விட்டார். கள நடுவர் ஏற்கெனவே விக்கெட் தராததால், தனது முடிவை மாற்றாமல் விக்கெட்டில்லை என்று அறிவித்து விட்டார். இது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கு சாதகமாக மாறிவிடும் என்ற விரக்தியில், இந்திய கேப்டன் கோலி கள நடுவரிடம் சண்டை போட ஆரம்பித்தார். பின்னர் சமாதானமில்லாமல் இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். இந்த நிகழ்வு பலவேறிடும் பலவிதமான கேள்விகளையை எழுப்பியுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரரான டேவிட் லிலியாட் இந்த நிகழ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார். இதே நிகழ்வு மற்ற விளையாட்டுகளில் அரங்கேறியிருந்தால், அப்போது சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டுக் கோலி வெளியேற்றப்பட்டு இருப்பார் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு தேசிய அணியின் கேப்டனாக செயல்படும் கோலி இம்மாதிரியான ஒழுங்கினங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இந்த நிகழ்விற்கு அவருக்குக் குறைந்த பட்சம் மூன்று டெஸ் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த நிகழ்விற்குக் கோலியின் மீது ஐசிசி யின் ஒழுங்கீன நடவடிக்கைகள் மீதான Level 1 அல்லது Level 2 தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கோலியின் மீது 2 எதிர்மறை புள்ளிகள் உள்ளது. ஒருவேளை இதற்கும் எதிர்மறை புள்ளிகள் வழங்கப்பட்டால், கேப்டன் கோலியால் கண்டிப்பாக அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாட முடியாது. மேலும் அடுத்த போட்டி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் அரங்கில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.