பாலியல் புகாரில் 4 அமைச்சர்கள்! - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்

4 அமைச்சர்கள் மீதான பாலியல் ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் திடீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுவதாகவும், அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த வழக்கின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் 4 அமைச்சர்கள் மீதான பாலியல் ஆதாரங்கள் விரைவில் வெளியாகும் என்று திடீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், “தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய 4 அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மீதும் பாலியல் புகார் உள்ளது. அது தொடர்பான ஆதாரங்கள் விரைவில் வெளிவரும்” என தெரிவித்து உள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>