ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜ்: இந்தியாவில் சோதனை முயற்சி

இந்தியாவில் குரல் பதிவுகளை அனுப்பும் வசதி ஆய்வுநிலையில் இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி பயன்பாட்டுக்கு வந்தால் பிரேசில் மற்றும் ஜப்பானை தொடர்ந்து இதைப் பெற்ற மூன்றாவது நாடாக இந்தியா அமையும். டிஎம் என்னும் நேரடி செய்தி மூலமாக வாய்ஸ் மெசேஜ்களை அனுப்புவது உரையாடல்களை எளிதாக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவருடைய குரலை கேட்பது உணர்வுரீதியான பிணைப்பை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குரல் செய்தியும் (வாய்ஸ் மெசேஜ்) 140 நொடி நேர அளவில் இருக்கவேண்டும். பயணிக்கும்போதும் அதிக அளவில் டைப் செய்யவேண்டிய நேரத்திலும் வாய்ஸ் மெசேஜ் அதிக பயனுள்ளதாயிருக்கும். டிஎம் உரையாடலில் புதிய குரல் பதிவு (வாய்ஸ் ரெகார்டிங்)ஐகானை அழுத்தி பதிவு செய்ய ஆரம்பிக்கலாம். தேவையானவற்றை கூறி முடித்ததும் ஸ்டாப் ஐகானை அழுத்தவேண்டும். வாய்ஸ் மெசேஜ்ஜை அனுப்புவதற்கு முன்பு பதிவை கேட்கலாம்; அழிக்கவும் செய்யலாம்.

ஐஓஎஸ் பயனர்கள், வாய்ஸ் ரெக்கார்டிங் ஐகானை அழுத்திப் பிடித்தபடி பதிவு செய்யலாம். பேசி முடித்ததும் ஸ்வைப் செய்து மெசேஜ்ஜை அனுப்பலாம். ட்விட்டர் எப்படி பயன்படுத்துவோரானாலும் வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்கலாம். ஆனால், டிஎம் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது தற்போது இந்தியாவில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். தங்கள் டைம்லைனில் மற்ற பதிவுகளோடு குரல் பதிவை காண்போர், இமேஜை தட்டி பதிவை கேட்கலாம். இது உரையாடலின் தரத்தை மேம்படுத்தி இனிய அனுபவத்தை கொடுக்கும் என்று ட்விட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

More News >>