பிரபல நடிகை 2வது திருமணம்.. பெண் புரோகிதர் நடத்தினார்..
தெலங்கானாவைச் சேர்ந்தவர் தியா மிர்ஸா. மாடலிங் துறையிலிருந்து சினிமாவில் நடிக்க வந்தார். தமிழில், என் சுவாசக் காற்றே படத்தில் நடித்தார். பிறகு இந்தி படங்களில் நடித்து வந்தார். கேஷ், ஒம் சாந்தி ஒம், கிஸ்ஸன் உள்ளிட்ட பல இந்தி படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்திருக்கிறார். டிவி ஷோவிலும் பங்கேற்றிருக்கிறார்.தியா மிர்சா காதலன் வைபவ் ரேகியை சமீபத்தில் மணந்தார். இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு நெருக்கமான விழாவாக நடந்தது. வழக்கமாகத் திருமண விழாக்களை ஆண் புரோகிதர் கள் நடத்துவது வழக்கம்.
ஆனால் தனது திருமணத்தில் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் தலைமுறை இடைவெளியைச் சமமாக மதிக்கும் வகையில் பெண் புரோகிதரிடம் திருமணம் நடத்தி வைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார் தியா.நடிகை தியாவின் திருமண விழாவைப் பெண் புரோகிதர் ஷீலா அட்டா நடத்தினார். விழாவை நடத்தி வைத்த ஷீலா அட்டாவுக்கு நன்றி தெரிவித்த தியா ட்விட்டரில் தலைமுறை சமத்துவம் பற்றிப் பேசினார். "எங்கள் திருமண விழாவை நடத்திய ஷீலா அட்டாவுக்கு நன்றி. தலை முறை சமத்துவப்படி இது நடந்தது என்றார்.
தியா மிர்சா மற்றும் வைபவ் ரேகி ஆகியோர் திருமணம் செய்வதற்கு முன்பாக ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்பட டேட்டிங் செய்தனர். மும்பையில் நடந்த திருமண் விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டதுடன் தியாவின் தோழியும் நடிகையும் அதிதி ராவ் ஹைத்ரியும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.பிறகு தியா மற்றும் வைபவ் திருமண இடத்திலிருந்து வெளியே வந்து திருமண விழாவுக்குப் பிறகு புகைப் படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர். நடிகை தனது திருமண ஆடையாக பனராசி சேலை அணிந்திருந்தார்.தியா மிர்சா முன்னதாக தொழிலதிபர் சாஹில் சங்காவை மணந்தார். ஆனால் அவர்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர்.