தெலங்கானாவில் பயங்கரம் நடுரோட்டில் வக்கீல் தம்பதி வெட்டிக்கொலை

தெலங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் சீலம் ரங்கையா . இவர் கடந்த ஆண்டு மே 26ஆம் தேதியன்று, ராமகுண்டம் மந்தானி போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மந்தானி காவல் நிலையத்தில் மறுநாள் அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது நாகமணி என்ற பெண் வழக்கறிஞர் தொடர்பாக பொது நல வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ரங்கையாவின் மரணம் தொடர்பாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடுமாறு தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த வழக்கு தொடர்ந்த நாள் முதல் தனக்கு போலீசாரிடமிருந்து மிரட்டல்கள் வருவதாகவும், பொய்யான வழக்குகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர் இதனால் தனக்கும் தனது கணவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று என கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட இத்தம்பதியினர் மனு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை இத்தம்பதி பெடப்பள்ளி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவர்களை வழிமறித்து கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் வழக்கறிஞர் நாகமணி காரின் சீட்டில் அமர்ந்த நிலையில் உயிர் தந்தார் அவரது கணவர் கணவர் கட்டு வாமன் ராவ் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். அப்போது அந்த வழியே சென்ற ஒருவர் இதனை வீடியோவாக எடுத்தார் தங்களைக் கொல்ல ரவுடிகளை அனுப்பியது குண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் என கட்டுவாமன்ராவ் கூறினார். பின்னர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். வழக்கறிஞர் தம்பதியினர் பட்டப்பகலில் பரபரப்பு மிகுந்த சாலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர் கட்டுவாமன்ராவ் குறிப்பிட்ட குண்டா ஸ்ரீனிவாஸ் என்பவர் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்தவர் . கொலை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இந்த வீடியோ சமூக் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இச்சம்பவத்தின் போது தப்பி ஓடிய வழக்கறிஞரின் காரின் டிரைவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>