இருளில் மூழ்கிக்கிடக்கும் கலாம் பள்ளி! இதில் 2020-ல் வல்லரசுக் கனவு வேறா..?
By Rahini A
மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பயின்ற பள்ளியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மண்டபம் பள்ளியில் கடந்து இரண்டு நாள்களாக மின்சார இணைப்பு இல்லாமல் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் பள்ளியின் மின்சாரக் கட்டணத்தை செலுத்தாதக் காரணத்தால் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த மண்டபம் பள்ளியில்தான் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் நாட்டின் முக்கிய அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பை படித்தார். அப்துல் கலாமே தனது சொந்த செலவில் இப்பள்ளியில் ஒரு நூலகத்தை அமைத்திருந்தார். தற்போது இந்த நூலகம் மூடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாமல் அபராதத் தொகை மட்டுமே 10ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ளதால் கட்டாயத்தின் பேரிலேயே இந்த முடிவை எடுத்ததாக மின்சாரத் துறையினர் கூறிகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com