வீணாய்ப்போன நம் பிரதமரின் திட்டங்கள்- 19 கோடி இந்தியர்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை!
இந்தியாவில் 19 கோடி பேருக்கு வங்கிக்கணக்கே இல்லை என உலக வங்கி கொடுத்த ஆய்வறிக்கை மீண்டும் நம் பிரதமரின் உன்னத திட்டங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது.
நம் இந்தியப் பிரதமர் மோடி தனது 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் மூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் பின்னர் நாட்டின் கடைக்கோடி கிராமங்களிலும் இருக்கும் மக்களும் வங்கிக்கணக்கு தொடங்கியதாக மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் மோடியின் இந்த சிறப்பான திட்டத்துக்கு உலக வங்கியும் சிறப்பான திட்டம் என மோடியை பாராட்டியது. ஆனால், அதே உலக வங்கிதான் தற்போது 19 கோடி இந்தியர்களுக்கு அடிப்படை வங்கிக்கணக்கே இல்லை என என நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் 69 சதவிகிதத்தினருக்கு வங்கிக்கணக்கு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 11 சதவிகிதத்தினர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வளரும் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த நினைத்து உருவாக்கியத் திட்டத்தால் பயனேதுமில்லை எனக் கூறப்படுகிறது.
உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளாக சீனாவும் இந்தியாவும் நிற்கின்றன. அதே போல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு வங்கிக்கணக்கு இல்லாமல் உள்ள நாடுகளின் பட்டியலிலும் சீனாவும் இந்தியாவுமே முதல் இரண்டு இடங்களில் முறைப்படி இடம்பெற்றுள்ளன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com