ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை கோரி விண்ணப்பித்த விண்ணப்பம் பிப்.24-ம் தேதி ஏலம்!
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வேலை கோரி விண்ணப்பித்த விண்ணப்பம் ஏலத்திற்கு வந்துள்ளது. டிஜிட்டர் தொழில்நுட்ப சாதனங்களில் முன்னோடியாக திகழும் ஆப்பிள் நிறுவனத்திற்கு நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்சை தெரியாதவர்களே உலகளில் இருக்க முடியாது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் சூரியவம்சம் படத்தின் நட்சத்திர பாடலை போல், ஸ்டீவ் ஜாப்ஸின் கதையை ஊக்கமான ஒன்று. சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார்.
இந்நிலையில், 1973-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் தனது கைப்பட எழுதி வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பம் தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. வேலை விண்ணப்பத்தில் மேஜர் படிப்பாக இங்கிலீஸ் லிட்ரேச்சர் என ஸ்டீவ் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்கில்ஸ் பகுதியில் கம்யூட்டர், கால்குலேட்டர் என்றும், தொழில்நுட்பம், டிசைன் பொறியியலில் சிறப்புத் தகுதி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தில் எந்த வேலை, எந்த நிறுவனம் என்ற வேறு தகவல்கள் இடம்பெறவில்லை. ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கம்யூட்டர் நிறுவனம் என்பதை குறிப்பதாகவே உள்ளது.
charterfields என்ற இணையதளத்தில் இந்த ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முன்னதாக, 2018-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸின் விண்ணப்பம் ஏலத்தில் விடப்பட்டபோது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் 1 லட்சத்து 75 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.