இவருக்கா இத்தனை கோடி! மீம் போட்டு கலாய்க்கும் அதிரடி வீரர்!
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 திருவிழா வரும் மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் நடக்க தயாராக உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் அரங்கேறியது. இந்த தொடரில் பங்கு பெறும் எட்டு அணியின் உரிமையாளர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் ஏலத்திற்கான பட்டியலில் இடம்பெற்றனர். அதில் 164 வீரர்கள் இந்திய நாட்டினை சார்ந்தவர்கள். மீதமுள்ள 128 வீரர்களில் 3 வீரர்கள் பக்கத்து நாட்டினை சார்ந்தவர்கள். மீதமுள்ள 125 வீரர்களும் வெளிநாட்டினை சார்ந்தவர்கள் ஆவர்.
இந்த ஏலத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணியைச் சார்ந்த ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் ஏலம் விடப்பட்ட போது. அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக இந்த ஏலப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே அரங்கேறியது. ஒரு கட்டத்தில் சென்னை அணி தன்னாள் முடிந்த அளவிற்கு மேக்ஸ்வெல்லே ஏலம் எடுக்க போட்டி போட்டது. ஆனால் அவர்களின் பணப்பை அந்த அணியை போலவே நைந்து போனதால், மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு தட்டி தூக்கியது கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இந்த நடவடிக்கையை அந்த அணியின் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வந்தாலும், இணையத்தில் அந்த அணிக்கு எதிரான விமர்சனங்கள் குறைவில்லாமல் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை வெளியிட்டு அணியையும், அணி நிர்வாகத்தையும் கலாய்த்து தள்ளியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேவாக் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெலுக்கு, 10 கோடி குடுத்து சுற்றுலா அழைத்து வந்தது போலத்தான் என சாடி இருந்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் இவர் பெரிதாக எதனையும் சாதிக்காததும் மேக்ஸ்வெல் மீதான விமர்சனங்களுக்கு ஒரு முக்கிய காரணம். இதனால் தான் பஞ்சாப் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார் மேக்ஸ்வெல்.
மேக்ஸ்வெல் 10 கோடிக்கு இலாய்க்கு இல்லை என்று கழட்டி விடப்பட்ட வீரரைப் பெங்களூர் அணி போட்டி போட்டு 14.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதை இந்த முறையாவது ஈடுகட்டுவாரா? என்ற கேள்விக்கு மார்ச் மாதத்தில் விடை தெரியும்.