மறைந்த தந்தையின் பட டிரெய்லரை வெளியிட்ட குழந்தை..
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார்.கணவரின் திடீர் மரணம் மேக்னாவை மனதளவில் கடுமையாகப் பாதித்தது சிரஞ்சீவி இறக்கும்போது மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு மேக்னாராஜ் அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அக்குழந்தை சற்று வளர்ந்த நிலையில் காதலர் தினத்தன்று ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
மேக்னா ராஜ் மகன் ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா தனது தந்தையின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான ராஜமர்த்தந்தாவின் டிரெய்லரை வெளியிட வேண்டும் என்று அப்பட தயாரிப்பாளர்கள் விரும்பினர். இதுகுறித்து மேக்னாராஜை சந்தித்துப் பேசியதும் அவர் ஒப்புக்கொண்டார். அதன்படி ட்ரெய்லர் குழந்தையின் கரங்களால் வெளியிடப்பட்டது.இன்று சிரஞ்சீவியின் சகோதரர் நடித்த செம திமிரு திரைக்கு வருகிறது. இப்படத்தின் இடைவேளையின் போது ராஜமர்த்தந்தா டிரெய்லர் திரையிடப்படுகிறது.
ராஜமர்த்தந்தா படத்திற்கு டப்பிங் பேசி முடிப்பதற்கு முன்பே சிரஞ்ஜ்சிவி சர்ஜா காலமாகிவிட்டதால் படத்தில் அவர் நடித்த காட்சிக்கு துருவா டப்பிங் பேசினார். தற்போது சிரஞ்சியின் ராஜமர்த்தந்தா படம் கிட்டத்தட்ட வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.இன்று, சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ் இன்ஸ்டா கிராமில் ராஜமார்த்தந்தா படக் குழுவினருடன் ஜூனியர் பகிர்ந்துள்ளார். டிரெய்லரை காலை 7 மணிக்கு தனது ஆண் குழந்தை வெளியிட வைத்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் கிட்டத்தட்ட நான்கு படங்கள் தயாரிப்பில் வெவ்வேறு கால கட்டங்களில் உள்ளன. ராம் நாராயண இயக்கிய ராஜமர்த்தந்தா படத்தில் தீப்தி சதி, மேகாஷ்ரி, திரிவேணி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ஒரு முழுமையான ஆக்ஷன் என்டர்டெய்னர் என்று கூறப்படுகிறது.
சிரஞ்சீவி பழைய கன்னட உச்சரிப்பில் நீண்ட வசனங்களைக் கொண்டிருப்பதால் படத்திற்கு டப் செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருந்தார், ஆனால் அவரது மறைவால் அப்பணியை முடிக்கத் துருவா சர்ஜா முன்வந்ததற்கு இதுவும் ஒரு காரணம். சிரஞ்சீவி சர்ஜாவின் மறைவு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தெற்கில் உள்ள பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி அவர் மூச்சுத் திணறி இறந்தார்.