பூண்டில் ஒளிந்திருக்கும் ரகசிய குணங்கள்.. வாங்க பார்க்கலாம்..
பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். இதனை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை நீங்கும். பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவின் சுவையை மேம்படுத்தும் மற்றும் ஊட்டச்சத்தை பல மடங்கு அதிகரிக்கும். பூண்டை வேக வைத்து சாப்பிடலாம், இல்லையென்றால் சமையலில் சேர்த்து சாப்பிடலாம். இதனை விட பூண்டை வறுத்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பச்சை பூண்டில் விட வறுத்த பூண்டில் தான் அதிக சத்து உள்ளதாக ஆய்வார்கள் கூறுகின்றனர். இப்பொழுது இருக்கும் ஆபத்தான காலத்தில் பூண்டு கஷாயத்தை செய்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். சரி வாங்க பூண்டை எப்படி வறுப்பது குறித்து செய்முறையை பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-பூண்டு -தேவையான அளவு எண்ணெய்-2 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு கடுகு-1 ஸ்பூன்
செய்முறை:-முதலில் பூண்டில் உள்ள தோலை சுத்தமாக எடுத்து விட்டு ஒரு ஒரு பல்லாக பிரித்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் காய்ந்தவுடன் அதில் சிறிது கடுகு சேர்த்து பொறிந்தவுடன் அதில் உரித்து வைத்த பூண்டை சேர்த்து கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். 10-15 நிமிடம் பூண்டை வறுக்க வேண்டும்.
குறிப்பு:- வறுத்த பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும் மற்றும் செரிமான பிரச்சனை,மலசிக்கல் ஆகியவையில் இருந்து விடிவு பெறலாம்.