கிருஷ்ணகிரியில் 4,684 கோடி முதலீட்டில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை

டாடா எலெக்ட்ரானிக்ஸ் தமிழ்நாட்டில் 4,684 கோடியை முதலீடு விரைவில் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரிவை நிர்மாணிக்க உள்ளது .இது குறித்துடாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் கூறுகையில் பொறியியல் மற்றும் உற்பத்தியில் இது மிகப் பெரிய திட்டம் என்றும் இது நாட்டிற்கான திறன்களை உருவாக்கும் என்றும் கூறினார். முக்கியமாகப் பெண்களுக்குக் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை உருவாக்கும், மேலும் புதிய தொழில்நுட்ப துறைகளில் திறமைக்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மொபைல் உதிரி பாகங்களின் உற்பத்தியில் உற்பத்தியில் நிறுவனத்தின் நுழைவு உள்ளூர் மின்னணு பொருட்களின் உற்பத்தியை மத்திய அரசு வலியுறுத்தி வரும் நேரத்தில் டாட்டா நிறுவனம் அதில் தனது பெரிய பங்களிப்பைக் கொண்டு வருகிறது.டாடா குழும நிறுவனமான டாடா எலெக்ட்ரானிக்ஸ் மொபைல் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வதற்கான வசதியை அமைப்பதற்காகத் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது. இதற்காகக் கிருஷ்ணகிரியில் உள்ள புதிய ஆலையில் ரூ 4 ஆயிரத்து 684 கோடி ரூபாயை முதலீடு செய்ய நிறுவனம் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 68,775 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 28,053 கோடி ரூபாய்க்கு28 நிறுவனங்களுடன் மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதில் டாடா நிறுவனமும் ஒன்று.இதன்படி கிருஷ்ணகிரியில் அமையவிருக்கும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 500 ஏக்கர் நிலத்தை டிட்கோ (தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்) ஒதுக்கியுள்ளது.

More News >>