இதயத்தை பாதுகாக்க வேண்டுமா? இவற்றை தவிர்த்துவிடுங்கள்!

இந்தியாவில் 5 கோடியே 45 லட்சம் பேருக்கு இதய நோய் இருப்பதாக 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் உயிரிழப்பவர்கள் நான்குபேரில் ஒருவரது மரணத்திற்கு இதயநோயே காரணமாயிருக்கிறது என்பது அச்சந்தரும் உண்மையாகும். அவ்வளவு ஆபத்தான இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்க சில வழிகள் உள்ளன. அவற்றுள் உணவு கட்டுப்பாடு ஒன்றாகும். சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தால் இதயத்தை பாதுகாக்க முடியும்.

பேக்கரி பண்டங்கள்

பேக்கரி உணவுகளில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச்சத்தே இல்லாத பூரித கொழுப்பும் (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளது. இவ்வுணவுகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய நோய்க்கு காரணமாகிறது. ஆகவே, இதயத்தைக் காப்பாற்ற பேக்கரி பண்டங்களை தவிர்ப்போம்.

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ்

ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸை வெறுக்க முடியுமா? அனைவரும் விரும்பி தின்னும் பண்டம் இது. ஆனால் இந்த உருளைக்கிழங்க உங்கள் இதயத்திற்கு மூன்று மடங்கு ஆபத்தை கொண்டு வருகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தக்கூடிய கார்போஹைடிரேடுகள் ஃப்ரஞ்ச் ஃப்ரையில் உள்ளன. அவற்றில் கொழுப்பும் உப்பும் இருப்பதால் இதயத்தை பாதுகாக்க ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுக்கு நோ சொல்லுங்கள்.

ஐஸ்கிரீம்

நல்ல ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் சாப்பிடக்கூடாது. சில ஐஸ்கிரீம்களில் நாம் ஒருநாளைக்கு சாப்பிடக்கூடிய கொலஸ்ட்ராலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. ஐஸ்கிரீமில் பூரித கொழுப்பு (சாச்சுரேட்டட் ஃபேட்) உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு அது ஆகாது.

ஃப்ரைடு சிக்கன்

உடல் எடையை குறைப்பதற்கு கிரில்டு சிக்கன் ஏற்றது என்பதில் ஐயமில்லை. ஆனால், கோழியிறைச்சியை நன்கு பொரித்தால் அது ஆரோக்கியமான உணவு அல்ல. தோல் நீக்காமல் பொரிக்கப்பட்ட கோழியிறைச்சியில், கிரில்டு சிக்கனை விட அதிக கொலஸ்ட்ரால் இருக்கும். ஆகவே, ஃப்ரைடு சிக்கன் சாப்பிடவேண்டாம்.

More News >>