கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணறடித்த நடிகை.. பாய்ஃபிரண்டுடன் ஓட்டலில் தங்கினார்..
தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஏஞ்சல் படம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் பாயல் ராஜ்புத். இவர் ஏற்கனவே தெலுங்கில் 'ஆர்.எக்ஸ் 100' படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். ஆனால் போதுமான பட வாய்ப்புகள் வரவில்லை. கவர்ச்சியான வேடங்களையும் ஏற்க தயங்காத பயல் ராஜ்புத் அதை இணைய தளம் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார். சமீபத்தில் வலையில் பின்னப்பட்டது போன்ற ஆடையை உடுத்தி உடல் அழகைக் காட்டி கிரங்கடித்தார்.
அந்த உடையில் படுகவர்ச்சியாக புகைப்படம் எடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை அதிகரித்தார். இது ரசிகர்களை மட்டுமல்ல பட வாய்ப்புகளை ஈர்ப்பதற்குமான டெக்னிக் என்பதில் சந்தேகமில்லை. புதியபட வாய்ப்புகளைத் தேடுவதற்காக அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார், மேலும் திரைப்பட தயாரிப்பாளர்களை கவர்ந்திழுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
சமீபத்தில் மும்பையில் ஓட்டல் ஒன்றில் பாய்ஃப்ரண் டுடன் சென்று தங்கியவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடை அணிந்து நீந்தி மகிழ்ந்ததுடன் பலவிதமான கவர்ச்சி படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார். பாயல் ராஜ்புத் டிவியில் நடித்துக்கொண்டிருந்து பிறகு சினிமாவுக்கு வந்தார். அதற்கு முன்பிருந்தே சவுரப் திங்க்ரா என்ற பாய்பிரண்டை காதலித்து வருகிறார். இருவருமே டெல்லியைச் சேர்ந்தவர்கள். ஒன்றாகப் பள்ளியில் படித்தது முதல் நட்பாக உள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் இவர்களின் உறவுக்கு ஆதரவாக உள்ளனர்.பாய்ப்ரண்டுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பாயல்.என் வாழ்வில் கிடைத்தவற்றில் மிகவும் சிறந்த பரிசு நீதான். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். திரைப்படங்களில் நடிப்பதுடன் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.