விக்ரம் படத்தில் நடிக்க தேர்வான நடிகை..
சியான் விக்ரம் படுபிஸியாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். சியான் விக்ரம் தனது மகன் துருவுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கத் தேர்வாகி இருக்கிறார் வாணி போஜன். இருப்பினும் இவர் படத்தில் விக்ரமுக்கு ஜோடியா அல்லது துருவ் ஜோடியா என்பது பற்றித் தெரியவில்லை.
வாணிபோஜன் 2010 இல் டிவியில் அறிமுகமானார். பிறகு சினிமாவிற்கு வந்தார். 'ஓ மை கடவுளே' படம் அவருக்குத் தமிழில் வலுவான மறுபிரவேசமாக அமைந்தது.கார்த்திக் சுப்பராஜுடன் சியான் விக்ரமின் படத்துக்குத் தற்காலிகமாக 'சியான் 60' என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு பரபரப்பான போஸ்டருடன் வெளியிடப்பட்டது. விக்ரம் தற்போதைய 'பொன்னியன் செல்வன்' மற்றும் கோப்ரா படப்பிடிப்பை முடித்தவுடன் இப்பட படப்பிடிப்பு தொடங்கும். இதற்கிடையில், கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் நீண்ட நாட்களாக முடங்கி இருக்கிறது. இதில் இன்னும் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.