கிரிக்கெட் வீரர் தோனி இப்போது பயன்படுத்தும் ஷூவின் விலை என்ன தெரியுமா?
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இப்போது பயன்படுத்தும் ஷூவின் விலையைக் கேட்டால் அசந்து போவீர்கள் அதிகமில்லை, வெறும் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஸ்டைலுக்கு எப்போதுமே ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். ஒரு காலத்தில் அவரது ஹேர் ஸ்டைல் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவரது நீளமான தலை முடியைப் பாராட்டாதவர்களே கிடையாது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் கூட தோனியின் ஹேர் ஸ்டைலை பலமுறை பாராட்டியுள்ளார்.இதேபோல மோட்டார் பைக்குகள் மீதும் தோனிக்கு அலாதி பிரியம் ஆகும். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல பிராண்டட் மோட்டார் பைக்குகளை அவர் வைத்துள்ளார். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் பைக்கில் அதிவேகத்தில் பறப்பது தான் அவரது முக்கிய வேலையாகும்.
இந்நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தோனி மும்பை சென்றார். மும்பை விமான நிலையத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். வழக்கம்போல முழுக்கை பிரிண்டட் டி-ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து ஜாகர்ஸ் தோற்றத்தில் இருந்தார். அவர் காலில் அணிந்திருந்த ஷூவை பார்த்த ரசிகர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். பிரான்சில் தயாரிக்கப்படும் அதிசொகுசு பிராண்ட் ஆன பால்மெயின் ஷூவை அவர் அணிந்திருந்தார். அதன் விலையைக் கேட்டால் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். பிரான்சில் இந்த ஷூவின் விலை 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இறக்குமதி வரி, சுங்க வரி எல்லாம் சேர்த்து 90 ரூபாய் ஆகி விடும். பெரும்பாலும் மலையேற்ற பயிற்சிக்குச் செல்பவர்கள் தான் இந்த விலை உயர்ந்த ஷூவை அணிவார்கள்.