வாரணாசி கங்கை ஆற்றில் தீபம் விட்ட சிம்பு.. சீக்கிரம் திருமணம் ஆக வேண்டுதல்?
நடிகர் சிம்பு சமீபகாலமாக அடிக்கடி கோவில் கோவிலாக சென்று வழிபடுகிறார். சில மாதங்களுக்கு முன் ஐயப்பன் சாமிக்கு விரதம் இருந்து சபரிமலை சென்றார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட வேறு சில முக்கிய கோயில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அண்மையில் திடீரென உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்குச் சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் நேற்று இரவு தீபம் ஏற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.உரிய காலத்தில் திருமணம் நடக்காமலிருப்பது, குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7ம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 1,2,5,7,11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதால் திருமணம் அல்லது குழந்தைப் பேறு ஏற்படுவதில் தாமதம் சிக்கல் ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் 2, 8ம் இடங்களில் ராகு - கேது பார்வை ஏற்பட்டிருந்தாலும் இந்த தோஷம் ஏற்படக் கூடும். இதற்கான பரிகாரத்தில் ஒன்றுதான் படகு தீபம் கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.
சிம்பு வாரணாசியில் படகு தீபம் ஏற்றினார். சிம்பு திருமணம் பற்றிக் கடந்த 2 வருடமாகவே பல்வேறு கிசுகிசுக்கள் உலா வருகின்றன. ஆனால் அதுபற்றி சிம்பு பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் காக்கிறார். ஆனால் கொரோனா காலகட்டத்தில் அவர் வீட்டில் சமையல் வேலை செய்து குடும்பத்தினருக்கு உணவு சமைத்தளித்தார். அப்போது அவருடன் இருந்த நடிகர் விடிவி கணேஷ்,உனக்கு வரப்போகிற மனைவி கொடுத்து வைத்த வங்க நீயே அவங்களுக்கு சமைத்து போட்டுவே என்று தமாஷாகக் கூற அதற்குப் பதில் அளித்த சிம்பு, பொண்டாட்டி வந்தா அவங்க வீட்டுக்கு சமைத்துத்தான் போடணுமா, நாம் சமைத்து அவருக்குப் போட்டால் என்ன தப்பிருக்கிறது என்று இல்லாத மனைவிக்கு அல்லது வரப்போகும் மனைவிக்கு ஆதரவாக சிம்பு பதில் அளித்தது வைரலானது.சிம்புவுக்கு உறவுக்கார பெண்ணை பார்த்திருப்பதாக ஒருபக்கம் தகவல் வருகிறது. இன்னொரு பக்கம் திரிஷாவை மணக்க உள்ளதாக வதந்தி பரவுகிறது.
ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன. எதற்கும் தடாலடியாகப் பதில் அளிக்கும் அவர் சமீபகாலமாக அன்பைப் பரப்புங்கள் என்று மேடைக்கு மேடை பேசுகிறார். அடிக்கடி சாமி தரிசனம் செய்யக் கோவில் கோவிலாகச் சென்று வருகின்றார். சினிமா படப் பிடிப்பைப் பொருத்தவரை ஈஸ்வரன் படத்தை 28 நாட்களில் முடித்துக்கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது மாநாடு படத்தில் நடிக்கிறார். இப்படம் முடிந்ததும் பத்து தல படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.