விஜய் ஹசாரே தொடர்: 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்!
விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 94 பந்துகளில் 173 ரன்கள் எடுத்து ஜார்கண்ட் கேப்டன் இஷான் கிஷன் அதிரடி காட்டியுள்ளார். விஜய் ஹசாரே 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இன்று மத்தியப்பிரதேச மாநிலம் ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
இதில், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் அணிகள் இன்று மோதின. போட்டியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஜார்கண்ட் அணி கேப்டன் இஷான் கிஷன், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 94 பந்துகளில், 11 சிக்ஸர்களும், 19 பவுண்டரிகளும் என அடித்து நொறுக்கிய நிலையில், 173 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இளம் வீரர் 97 பந்துகளில் 173 ரன்கள் எடுத்தது நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளதால், இஷான் கிஷன் விளையாட்ட பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இஷான் கிஷன் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் மும்பை அணிக்காக அதிக ரன்களை இஷான் கிஷன் எடுத்து கொடுத்தார். கடந்த 2020 ஐபிஎல் சீசனில் இஷான் கிஷன் மட்டும் 516 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன் விளாசலில் 50 ஓவர் முடிவில் ஜார்கண்ட் அணி 9 விக்கெட் இழப்புக்கு 422 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து உள்நாட்டுப் போட்டியில் 50 ஓவர் ஆட்டத்தில் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணியாக ஜார்கண்ட் அணி திகழ்கிறது.