புதுச்சேரி எல்லா எம்எல்ஏக்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு
சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது.ஒவ்வொரு எம்எல்ஏக்கள் ஆகக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் இதுவரை 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக் கூடும் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் நாராயணசாமியோ நாங்கள் ராஜினாமா செய்ய மாட்டோம். எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது .அதைச் சட்டமன்றத்தில் நிரூபிப்போம் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டார்.
இந்த நிலையில் புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை ஏற்று வரும் 22ஆம் தேதி சட்டசபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு உதிரவிட்டுள்ளது. இதையடுத்து படிப்படியாக எல்லா எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.