புதுச்சேரியில் ஆட்டம் காணும் ஆட்சி..
புதுச்சேரியில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகிவிட்டது. சட்டமன்றத்தின் இறுதிக் கட்டத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது. இதுவரை 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக் கூடும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நாராயணசாமி ராஜினாமா செய்ய மாட்டோம். எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. அதை சட்டமன்றத்தில் நிரூபிப்போம் என்று சொல்லி விட்டார்.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை ஏற்று நாளை திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பிற்பகல் லட்சுமி நாராயணன் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் சபாநாயகர் சிவக்கொழுந்து விடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர் சுமி நாராயணன் காங்கிரஸ் ஆட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை.
எனவே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இன்று லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்து கட்சியின் பலத்தை 14 லிருந்து 13 குறைத்து விட்டார். ஏற்கெனவே பதவி விலகிய நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் அடுத்தடுத்து பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர். தற்போது பதவி விலகிய லட்சமி நாராயணசாமி அனேகமாக என்.ஆர்.காங்கிரசில் சேருவார் என தகவல். இனி காங்கிரசை காப்பாற்றுவது கஷ்டமான காரியம் என்பதால் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் தீவிரமாக இருக்கிறார். லஷ்மி நாராயணன் ராஜினாமாவை தொடர்ந்து புதுச்சேரியை அரசியல் திருப்பம் பரபரப்பாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.