46 ரூபாய் லஞ்சம் கொடுக்காததால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம்

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய முடிவு ஒன்றுக்கு அங்குள்ள ஊழியர்கள் 46 ரூபாய் லஞ்சம் கொடுக்க கேட்டனர். அதை விவசாயிகள் கொடுக்காததால் நெல்கொள்முதல் நடக்கவில்லை இந்நிலையில் நேற்று பெய்த மழையால் பத்தாயிரம் நெல் மூடைகள் மழையால் நாசமானது. கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கொளக்குடி என்ற கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டு வருகிறது.

இப்பகுதியை சுற்றியுள்ள கோட்டகம், மேட்டுக்குப்பம் பகுதி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை இங்கு வந்து விற்பனை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவ்வாறு விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்க வந்த போது மூட்டை ஒன்றுக்கு 46 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அங்குள்ள ஊழியர்கள் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் விவசாயிகள் லஞ்சம் தர மறுத்ததால் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் கொண்டுவந்த நெல் மூட்டைகள் அங்கேயே தேக்கமடைந்து விட்டது.

இந்நிலையில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமானது. ஏற்கனவே புயல் மற்றும் மழை காலங்களில் இங்கு மழைநீர் புகுந்து சேதப்படுத்தியது. அதுதவிர என்.எல்.சி சுரங்க நீராலும் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இப்போது மூட்டைக்கு 46 ரூபாய் லஞ்சம் தர மறுத்ததால் கடந்த பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகிவிட்டது. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News >>