தனுஷ் படம் ஜெகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் உறுதியானது..

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானது.தீபாவளியையொட்டி 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டரில் படங்கள் வெளியிட அனுமதிக்கப்பட்டது. இதனால் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கலையொட்டி 100 சதவீதம் டிக்கெட் அனுமதி அளிக்கப்பட்டது. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் மீண்டும் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மாஸ்டர் படம் வெளியாகி 250 கோடி வசூல் சாதனை படைத்தது. ஆனாலும் ஜகமே தந்திரம் வெளியாகவில்லை.

ஜகமே தந்திரம் தியேட்டரில் வருமா? ஒடிடியில் வருமா என்று குழப்பத்திலிருந்த நிலையில் தற்போது ஒடிடி தளம் நெட்பிளிக்ஸில் வெளியாவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.தமிழில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான ஜகமே தந்திரம் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தில் பிரத்தியேகமாக வெளியிடுகிறது. ஜகமே தந்திரம் படம், சுருளி எனும் கேங்க் ஸ்டர் தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதைச் சொல்லும் படமாகும்.

இத்திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் 2021ல் வெளியாகும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களைச் சென்றடைய உள்ளது.நெட் ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:ஜகமே தந்திரம் எனது கனவு திரைப்படம் என்பது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் இதைச் சொல்லப் பட வேண்டிய முக்கியமான கதை மேலும் உலகில் உள்ள அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை அனைத்து ரசிகர்களையும் சென்றடைய இப்படம் ஒரு பொது வழியினை கண்டறிந்துள்ளது ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் 190 நாடுகளில் பிரத்தியேகமாக ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படுகிறது ரசிகர்களுக்குத் தந்திரம் இருக்க உலகத்தை (டிரிக் வேல்டு) இப்படத்தின் மூலம் அளிக்க ஆர்வமாக உள்ளேன்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் சசிகாந்த் கூறியதாவது: ஒய் நாட் ஸ்டுடியோஸ் புதிய வகை கதைகள் கொண்ட திரைப் படங்களைத் துணிவுடன் தயாரிக்கும் நிறுவனம் எனும் பெயரைப் பெற்றிருக்கிறது இந்த துணிவு படங்களின் கதைகளில் வித்தியாசம் காட்டுவதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பு தரப்பில் அனைத்து வகை திட்டமிடுதலும் புதுமையை கடைப்பிடிப்பதில் முன்னணி வகிக்கின்றது. நெட் ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உள்ளதே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத் தையும் அளித்துள்ளது. நெட் பிளிக்ஸ் தளம் இதனை உலகெங்கும் எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை இப்படத்தில் நடிகர் மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் அபார உழைப்பு படத்தில் கண்டிப்பாகத் தெரியும் ரசிகர்கள் படம் பார்க்கும் போது தரும் உற்சாகக் குரல்கள் அவர்களின் உழைப்பிற்குப் பலனாக இருக்கும். ஒரு தரமான தமிழ்த் திரைப் படத்தினை உலகளாவிய ரசிகர்களுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறது நிறுவனம். 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தினை அனைவரும் கண்டு மகிழலாம்.

நெட்பிளிக்ஸ் இந்தியா அலுவல் அதிகாரி பிரதீ காசா ராவ் கூறியதாவதுகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தினை எங்கள் நிறுவனத்தில் வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி உலகம் முழுக்க உள்ள ரசிகர்களுக்கு சிறந்த ஒரு தமிழ் படத்தைக் கொண்டு செல்வதில் பெரும் உற்சாகம் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் உள்ளோம் தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுக்க ரசிகர்களுக்குக் கொண்டு செல்வதே பெருமை இப்படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

More News >>