பாடகரை விவாகரத்து செய்யும் ஹாலிவுட் நடிகை..
திருமணமான சில வருடங்களில் விவாகரத்து பல சினிமா நட்சத்திரங்களின் வாழ்வில் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஹாலிவுட்டில் இதற்கு பஞ்சமமே கிடையாது.ஹாலிவுட்டில் பிரபலமான பல நடிகைகள் இருந்தாலும் கிம் கர்தஷியன் மிகவும் பிரபலம். அவரை எப்போதும் கவர்ச்சி தோற்றத்தில் ரசிகர்கள் காணலாம் என்றளவுக்கு பொது வெளியில் வௌம்போதெல்லாம் படுகவர்ச்சி உடைகளில் வந்து ரசிகர்களைக் கவர்வது வழக்கம். அமெரிக்க டிவிக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் இருக்கிறார்.
இவருக்கும் அமெரிக்கப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது, மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். கிம்மிற்கு இன்னும் இளமை ஊஞ்சலாடுகிறது. அவருக்கும் பாடகர் மீக் மில் என்பவருக்கும் தற்போது நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அவ்வப்போது டேட்டிங் செய்கின்றனர். இந்த தகவல் பரபரப்பாகப் பரவிய நிலையில் அவரை கிம் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது, திருமணத்துக்குத் தயார் ஆகும் விதமாகக் கணவர் கென்யேவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவரும் விவாகரத்துக்குத் தயாராக இருக்கிறார். சொத்துக்கள் பிரிப்பது பற்றி இருதரப்பிலும் சமரச முயற்சி நடக்கிறது.
குழந்தைகளை இருவரும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கவும் பேசி உள்ளனர்.கிம், கென்யேவுக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கென்யே மனைவி கிம் பற்றி பகிரங்கமாக மீடியாக்களுக்கு பேட்டி அளித்ததுடன் அவர் பொது வெளியில் கூறிய சில சர்ச்சை கருத்துக்களில் கிம்மிற்கு உடன்பாடு இல்லையாம். இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஒரு குழந்தையைக் கருக்கலைப்பு செய்ய எண்ணியிருந்ததாக கெயின் தெரிவித்தார். இது கிம்மிற்கு அதிர்ச்சி அளித்தது. கருக்கலைப்பு செய்ய எண்ணியது பற்றி இப்போது கெயின் சொல்கிறார். அந்த குழந்தை வளர்ந்து இதுபற்றி விவரம் அறிந்தால் எவ்வளவு கஷ்டப்படும் என்பது கென்யே நினைத்துப்பார்க்கவில்லை என கிம் கூறுகிறார்.