ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி இயக்கவேக மாதிரி அறிமுகம்! விலை இவ்வளவுதான்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 48 எம்பி முதன்மை காமிராவுடன் 4 ஜிபி இயக்கவேகம் மற்றும் 128 ஜிபி சேமிப்பளவும் இதற்கு உள்ளது. தற்போது வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கிணங்க இந்த போனின் 6 ஜிபி இயக்கவேகம் கொண்ட மாதிரி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக ஸோமி நிறுவனம் கூறியுள்ளது.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:சிம்: இரட்டை நானோ சிம்தொடுதிரை: 6.53 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2340 பிக்ஸல்)இயக்கவேகம்: 6 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512 ஜிபியாக உயர்த்தும் வசதி)முன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட் ரியர் காமிரா)பிராசஸர்: குவல்காம் ஸ்நாட்டிராகன் 662 SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10; MIUI 12மின்கலம்: 6000 mAhசார்ஜிங்: 18Wரிவர்ஸ் சார்ஜிங் வசதி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், அகச்சிவப்பு கதிர் (ஐஆர்), யூஎஸ்பி டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்) கொண்ட 6 ஜிபி+128 ஜிபி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999/- எனவும் இது அமேசான், மி.காம் தளங்களிலும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>