நடராஜனின் லட்டு : இணையத்தில் வைரல்

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், தன்னுடைய மகளின் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.கிரிக்கெட் வீரர் நடராஜன், அவரது மகள் ஹன்விகா பிறந்தபோது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். முதலில் டி20 போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த அவர், அணியின் வீரர்கள் காயமுற்றதையடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார்.ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் நடந்து மூன்றாவது ஒருநாள் போட்டியில் களம் கண்ட நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தத்தில் ஆறு விக்கெட்டுகளை அத்தொடரில் நடராஜன் கைப்பற்றினார்.

காபா நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன நடராஜன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்கும் படியான தற்போது இங்கிலாந்து அணிக்கான தொடரில் நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மார்ச் 12ம் தேதி முதல் தொடங்க இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடராஜனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.கடந்த திங்கள்கிழமை நடராஜனின் மகள் ஹன்விகாவுக்கு நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் படத்தைப் பதிவிட்டுள்ள அவர், "எங்கள் குட்டி தேவதை ஹன்விகா" என்று குறிப்பிட்டுள்ளார். "நீ எங்கள் வாழ்க்கையின் மிக அழகிய பரிசாவாய். எங்கள் வாழ்வு இவ்வளவு அதிக மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நீயே காரணம். எங்களைப் பெற்றோராய் தெரிவு செய்ததற்கு நன்றி லட்டு. உன்னை நாங்கள் எப்போதும் என்றென்றைக்கும் நேசிக்கிறோம்" என்றும் நடராஜன் எழுதியுள்ளார்.

More News >>