ஐஸ்வர்யாராய்க்கு தயாராகும் அன்னப்படகு.. மணிரத்னம் தீவிர ஏற்பாடு..
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார். கொரோனா கால ஒய்வு முடிந்து படப்பிடிப்பில் பங்கேற்க கிரீன் சிக்னல் காட்டினார். இதையடுத்து மளமளவென படப்பிடிப்புக்காக பணிகளை மணிரத்னம் தொடங்கினார், கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் கலந்துகொண்டார். அவருடன் விக்ரம், சரத் குமார், கார்த்தி ,ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்ட எல்லா நட்சத்திரங்களும் படப் பிடிப்பில் பங்கேற்றனர்.
கொரோனா ஊரடங்கில் படப் பிடிப்புகள் தடையாகி பிறகு மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பொன்னியின் செல்வன் படப் பிடிப்பு தொடங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்றில் குணமாகி வீட்டில் ஓய்வில் இருந்தார் ஐஸ்வர்யா ராய் முழுமையாகப் பழைய உடல் நிலைக்குத் திரும்பிய பிறகு படப்பிடிப்பில் பங்கேற்கச் சம்மதித்தார்.
இதையடுத்து கடந்த 2 மாதத்துக்கு முன் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் ஐஸ்வர்யாராய் கலந்து கொண்டார். அவருடன் சரத்குமார் நடித்த காட்சிகள் மற்றும் திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி. ரஹ்மான், ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன். 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற முக்கிய காட்சிகளும் போர் காட்சிகளும் படமாக்கப்பட்டன.தெலுங்கு மாநிலங்களில் சில அழகான இடங்கள் உள்ளன மற்றும் பாபிகொண்டலுக்கான படகு பாதை அவற்றில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவின் மிக அழகிய இடங்களில் ஒன்று. அதன் சூழலும் ரம்மியமான அமைப்புள்ளது. 'பொன்னியன் செல்வன்' படத்தின் சில முக்கிய பகுதிகள் இந்த இடத்தில் படமாக்குகிறார். பாபிகொண்டலு மண்டலத்தின் சிங்கண்ணப் பள்ளி பகுதியில் ஏற்கனவே தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலா படகுகள் மற்றும் பிற பகுதிகள் அலங்காரங்களுடன் தயாராகி வருகின்றன.
மேலும் சில பெரிய செட் படப்பிடிப்புக்காக கட்டப்பட்டுள்ளன.வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கு ரிகர்சல் நடக்க உள்ளது. இதில் முக்கிய நடிகர்கள் படப்பிடிப்பில் சேரவுள்ளனர் எனப் பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வன் படம் மணிரத்னத்தின் கனவு திட்டம் மற்றும் அவர் கற்பனை செய்தபடியே இந்த படத்தை அற்புதமாகப் படமாக்க உறுதி செய்கிறார். படம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2022 இன் ஆரம்ப மாதங்களில் வெளியிடப்படலாம். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.