கடல் சீற்றம் எச்சரிக்கை: மீனவர்கள் இன்று, நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
கடல் சீற்றத்தால் 11 அடி உயரத்திற்கு அலை எழும்பும் அபாயம் இருப்பதால், இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் அறிவித்துள்ளார்.
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் தென்தமிழக கடற்பகுதியில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், சுமார் 11 அடி உயரத்திற்கு அலை எழும்பும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதன் முன்னெச்சரிக்கையாக, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் சீற்றமாக இருப்பதால் இங்கு கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com