6 கால்கள், 2 வால்கள்: 2 இனப்பெருக்க உறுப்புகள்: அமெரிக்காவில் பிறந்த அதிசய நாய்க்குட்டி!
அமெரிக்காவில் ஆறுகால்களுடன் பிறந்த நாய்க்குட்டி உயிர்பிழைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரில் ஆறு கால்களுடன் பிறந்த நாய்க்குட்டி உயிர்பிழைத்துள்ளது அதிசயம் என இப்பகுதி கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறு கால்கள் மட்டுமின்றி இரண்டு வால்கள், இரண்டு இனப்பெருக்க உறுப்புகள் உடன் நாய்க்குட்டிக்கு இருப்பதாகவும், ஸ்பைனா பிஃபிடா என்ற தண்டுவட பாதிப்புடன் இந்த நாய்க்குட்டி பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த நாய்க்குட்டி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.