அமேசான் பார்சல் போன்று சாக்லேட் கேக்: மகன் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்து தாய்!

அமேசான் பார்சல் போன்று பிறந்தநாள் கேக் செய்து கொடுத்து மகனுக்கு தாய் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இன்றைய டிஜிட்டர் உலகில் ஸ்மார்ட் போன் இல்லாத நபரை காண்வது அத்திவரதரை காண்பவது போல் உள்ளது. ஏனென்றால், ஸ்மார் போன் மூலம் பலவற்றை எளிதில் செய்து முடிக்க முடிகிறது. இதற்கிடையே, ஸ்மார்ட் போன் மூலம் விண்டோ ஷாப்பிங் செய்வது உலகில் உள்ள பெரும்பாலானவர்களின் வாடிக்கையாகி உள்ளது. அந்த வரிசையில், இங்கிலாந்தில் உள்ள இளைஞர் கேன் வில்லியம்ஸ், விண்டோ ஷாப்பிங்கில் எந்நேரமும் மூழ்கி இருப்தும், அமேசான் இ - காமர்ஸ் நிறுவனம்தான் அவரது விருப்பமாக உள்ளது.

இந்நிலையில், கேன் வில்லியம்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தாயார் நினா ஏவான்ஸ் வில்லியம்ஸ், அமேசான் பார்சல் போலவே கேக் செய்து மகனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். வழக்கமாக பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது பெற்றோரின் வழக்கம்.ஆனால், நினா ஏவான்ஸ் தன்து பிள்ளைக்காக கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் மூலம், கேன் வில்லியம்ஸ் 24-வது பிறந்தநாள் பலரது கவனத்தை பெற்றதோடு, வாழ்த்துகளாகவும் குவிந்து வருகிறது. கேனின் தாயார் நினா ஏவான்ஸ் வில்லியம்ஸ் தொழில் ரீதியாக கேக் வடிவமைத்து வருபவர் என்பதால், மகனுக்கு அமேசான் பார்சல் போன்று 4 லேயர் கொண்ட சாக்லேட் கேக்காக உருவாக்கியுள்ளார்.

More News >>