ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்ககூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகளும் குறைந்தளவே வருகை தந்தனர். ஆற்றில் நீர் வரத்து அதிகப்படுத்த கர்நாடக அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு தண்ணீர் வரத்து 2000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள சினிஃபால்ஸ், மெயின அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவே வந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளததன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரின் வேகம் அதிகமானதால் இது சுற்றுலா பயணிகளை நிச்சயமாக கவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.