திருப்பதி கோவிலுக்கு ரூ 2 கோடி மதிப்புள்ள தங்க சங்கு, சக்கரம் தேனி பக்தர் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக நாளை வழங்குகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதற்காக தேனியை சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர் ரூபாய் 2 கோடி மதிப்பில் நான்கு கிலோ தங்கத்தால் சங்கு மற்றும் சக்கரத்தை தயார் செய்துள்ளார். இன்று திருமலைக்கு கொண்டுவரப்பட்ட சங்கு சக்கரத்தை நாளை ஏழுமலையான் கோவிலில் வழங்க உள்ளார். இதுகுறித்து தங்கதுரை கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறேன்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லை. . இந்நிலையில் . கொரோனா காலகட்டத்தில் 30 நாட்கள் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அப்பொழுது ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன் . வேண்டிக் கொண்ட சில நாட்களிலேயே குணம் அடைந்தேன். இதையடுத்து ஏழுமலையானுக்கு சங்கு சக்கரம் நன்கொடையாக வழங்குவதற்காக காணிக்கை தயார் செய்து இதை (புதன் கிழமை) நாளை ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பிக்க உள்ளேன். என அவர் தெரிவித்தார்.