மாதவன் தான் என்னுடன் நடிக்க வேண்டும்: அடம்பிடிக்கும் ஷாருக்கான்
புஷ்கர்-காயத்ரி இயக்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான திரைப்படம் விக்ரம்-வேதா மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம். இந்த படம் இந்தியில் ‘ரீமேக்’ செய்ய புஷ்கர் காயத்ரி திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மாதவன் தான் விக்ரம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் இந்தியிலும் நடிக்க வேண்டும். விஜய் சேதுபதி பாத்திரத்தில் நான் நடிக்க தயார் என்று ஷாருக்கான் சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.
ஆனால் மாதவன் தோல் பட்டை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டு ஓய்வில் உள்ளார். அவர் சீக்கிரம் குணமடைந்து இந்தி பதிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம். தெலுங்கு திரைப்படமான 'டெம்பர்' இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது அதில் நடிக்க மாதவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை இழந்த மாதவன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தை சோனு சூட் பெற்றார்.
மேலும் இரண்டாவது நிபந்தனையாக இந்த படத்தை இந்தியில் நீரஜ் பாண்டே இயக்க வேண்டும் என்று விரும்புவதாக ஷாருக்கான் கூறியுள்ளார். இந்தியில் புஷ்கர்-காயத்ரி இருவரும் இயக்குவார்கள் என்று கூறப்பட்டது.
நீரஜ் பாண்டேவும் "விக்ரம் -வேதா படத்தில் ஷாருக்கான் நடிக்க வேண்டும் என்றும் அதனை தான் இயக்க வேண்டும்" என்றும் கூறியிருந்தார்.
தற்போது ஷாருக்கான் "ஸீரோ" என்ற திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். அடுத்ததாக ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படத்தை ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com