பிரபாஸுடன் மோதலுக்கு தயாரான ஹீரோயின்..
பிரபாஷ் நடிக்கும் புதியபடம் ராதே ஷ்யாம். ஐரோப்பிய பின்னணியில் உணர்வுப்பூர்வமான காதல் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.கொரோனா காலகட்டத்தில் தடைப்பட்டிருந்த இப்படத் தின் படப்பிடிப்பு பின்னர் கொரோனா ஊரடங்கு தளர்வில் தொடங்கப்பட்டது. இத்தாலி, ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடந்தது. கொரோனா கால தளர்வில் அங்குப் படப்பிடிப்பு நடந்த போது கடுமையான விதிமுறைகளால் படக் குழு திணறியது. ஒரு வழியாக அதை தாக்குப் பிடித்துப் படப் பிடிப்பை முடித்தார்கள்.
பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார் என 3 படங்களில் நடிப்பதுடன் நாக் அஸ்வின் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றில் நாக் அஸ்வின் படம் தவிர மற்ற படங்களின் படப்பிடிப்பு நடக்கிறது. ராதே ஷியாம் படப்பிடிப்பு முடிந்து அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஜூலை 30ம் தேதி இப்படத்தை வெளிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு போட்டியாக நடிகை அலியாபட் படம் அதே நாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.
பாலிவுட்டில் விபசாரா விடுதி நடத்தி ரவுடி சாம்ராஜ்யம் நடத்திய கங்குபாய் கத்தியா வாடியின் வாழ்க்கை கதையில் நடித்துள்ளார். இப்படத்தை எதிர்த்து கங்குபாயின் வாரிசு ஒருவர் படத்துக்குத் தடை விதிக்க கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சமீபத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படம் ஜூலை தேதி 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷியாம் படம் தென்னிந்தியாவில் வெளியாகி வெற்றி பெற்றாலும் வட இந்தியாவிலும் அவர் படம் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியில் வெளியாகும் ராதே ஷ்யாம் படத்துக்கு அலியா பட்டின் கங்குபாய் கத்தியா வாடி படம் கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்தியில் பிரபாஸ் பட வசூல் பாதிக்கும் எனத் தெரிகிறது, போட்டியைத் தவிர்க்க இருதரப்பும் பேசி வெவ்வேறு தேதிகளில் படத்தை வெளியிட முன்வருவார்களா என்பது இனிதான் தெரிய வரும்.