5 ஜி வசதி, 48 எம்பி முதன்மை காமிரா: ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5ஜி அறிமுகம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான ரியல்மீ க்யூ2 ஸ்மார்ட்போனின் வேறுபட்ட வடிவமாக ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஜி தகவல்தொடர்பு வசதி இதில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மார்ச் 4ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் தளங்களிலும் முன்னணி நேரடி அங்காடிகளிலும் விற்பனையாகும்.

ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

சிம் : இரட்டை நானோ சிம்தொடுதிரை : 6.5 அங்குலம் எஃப்எச்டி+ (1080X2400 பிக்ஸல்)ரெஃப்ரஷ் விகிதம்: 120 Hzபிரைட்நஸ் : 600 nitsஇயக்கவேகம் : 6 ஜிபி மற்றும் 8 ஜிபிசேமிப்பளவு : 64 ஜிபி மற்றும் 128 ஜிபி (மைக்ரோ எஸ்டி கார்டு உதவியுடன் அதிகரிக்கும் வசதி)முதன்மை காமிரா: 16 எம்பி ஆற்றல்பின்புற காமிரா : 48 எம்பி + 8 எம்பி + 2 எம்பி (டிரிபிள் ரியர் காமிரா)(அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ ஷூட்டர் வசதி கொண்டவை)பிராசஸர் : மீடியாடெக் டைமென்சிட்டி 800யூ SoCஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; ரியல்மீ யூஐமின்கலம் : 5000 mAhசார்ஜிங் : 30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்எடை : 194 கிராம்

6 ஜிபி+64 ஜிபி வகை ரியல்மீ நார்ஸோ 30 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999/- ஆகும். 8 ஜிபி + 128 ஜிபி வகை ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999/- ஆகும்.

More News >>