ஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

ஓ.டி.டி எனப்படும் நேரடி தொலைக்காட்சி தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் சில சமூக வலைத்தளங்கள் வெளியிடும் திரைப்படங்கள், வீடியோக்கள் தொடர்கள் ஆகியவை தணிக்கை செய்யப்படாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது சமுதாயத்தில் பல்வேறு சீர்கேடுகளை உருவாக்கி வருகிறது எனவே ஓ.டி.டி. தளங்களுக்குத் தணிக்கை முறை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். குறைந்தபட்சம் இந்த நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளையாவது மத்திய அரசு விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று மத்திய அரசு அத்தகைய நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து இன்று உத்தரவு ஒன்றை வெளியிட்டது. சமூக வலைத்தளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

இதன்படி இந்த நிறுவனங்கள் ஒளிபரப்பும் காட்சிகள் குறித்து புகார் அளித்த 24மணி நேரத்தில் ஆபாசப் படங்களைச் சம்பந்தப்பட்ட தளங்கள் நீக்க வேண்டும்.அரசு, நீதிமன்றங்கள் தகவல்களைக் கேட்டால் சமூக வலைத்தளங்கள் கொடுக்க வேண்டும்.கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி வன்முறையைத் துண்டும் விதமான கருத்துகளை, காட்சிகளைத் தணிக்கை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்தனர்.இந்த விதிகள் இன்னும் 3 மாதத்தில் நடைமுறைக்கு வரும்.

More News >>