இனி பள்ளிகளுக்கு போகலாமா, வேண்டாமா? மாணவர்கள் குழப்பம்
9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார். இதை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு எழுதாமலேயே பாஸ் என்ற மகிழ்ச்சியை இந்த மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சி யை அளித்தது.
பள்ளிக்கு மாணவர்கள் வர தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 9,10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தார். பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள போதிலும் கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் மாணவர்கள் நாளை முதல் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
எனவே, இனி பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா? என்று குழப்பத்தில் மாணவர்கள் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக ஏற்கனவே இன்று 50 சதவிகித பெருந்துறை இயக்கப்பட்டதால் பல இடங்களில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல இயலவில்லை இந்த நிலையில் ஸ்ட்ரைக் நிலை என்ன என்று தெரியாத நிலையில் இனி படிக்க வேண்டாம் அப்புறம் எதற்கு வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற மனோபாவம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.