இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் மரணம்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது. இதிலிருந்து குணம் அடைந்து வந்தாலும், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
கடந்த மூன்று நாட்களாக அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று முதல் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 10.15 மணிக்கு அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.