இந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் இருந்து இலவசமாகவும், பணம் கொடுத்தும் வாங்கிய கொரோனா தடுப்பூசிகளை பங்களாதேஷ் தங்களுடைய நாட்டிலுள்ள விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தியது. இதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து நம் அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் உள்படப் பல நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக இலவசமாகவும், பின்னர் பணம் வாங்கியும் இந்த தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பங்களாதேஷுக்கு இதுவரை 30 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடுப்பு மருந்துகள் பங்களாதேஷில் விலை மாதர்களுக்குத் தான் முதலில் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா உள்பட மற்ற அனைத்து நாடுகளிலும் டாக்டர்கள், நர்சுகள் உள்படச் சுகாதாரத் துறை ஊழியர்களுக்குத் தான் முதலில் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் பங்களாதேஷில் முதலில் விலை மாதர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது உலக நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு அந்த நாட்டின் சுகாதாரத் துறை கூறிய காரணம் தான் அதைவிட ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து பங்களாதேஷ் நாட்டின் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியது: எங்களது நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் முதலில் விலை மாதர்களுக்கு தடுப்பூசி போடத் தீர்மானித்தோம். பங்களாதேஷில் ஆயிரக்கணக்கான விலை மாதர்கள் உள்ளனர். இங்குத் தினமும் ஏராளமானோர் வருகின்றனர். ஏதாவது ஒரு விலை மாதருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் மிக விரைவில் நோய் பரவும் ஆபத்து உண்டு. இதனால் தான் அவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடத் தீர்மானித்தோம் என்று கூறினர். மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதி போல பங்களாதேஷில் விலை மாதர்களுக்காக தவுலத் தியா என்ற பகுதி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விலைமாதர்கள் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நாட்டில் 18 வயதுக்கு மேல் ஆன பெண்களுக்குச் சட்ட ரீதியாக விபசாரத்தில் ஈடுபட அனுமதி உண்டு. கடந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது இந்த சிவப்பு விளக்கு பகுதி மூடப்பட்டது. இதனால் இங்குள்ள விலை மாதர்கள் வருமானம் இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டனர். இதையடுத்து இந்த சிவப்பு விளக்கு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது. பங்களாதேஷ் நாட்டில் கொரோனா பாதித்து இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டுள்ளது.