தல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..

சில வாரங்களுக்கு முன்பு வெளியான நடிகர் விஜய்யின் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சுமார் 250 கோடி வசூல் சாதனை புரிந்தது. சூர்யாவின் சூரரைப்போற்று முதல் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி வந்த நிலையில் மாஸ்டர் படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்தது. அந்த வதந்திகளை முறியடித்து மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியானதில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.பட ரிலீஸுக்கு முன்பே வெளியிடப்பட்ட மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனிமேஷன் படங்கள் வரவேற்பைப் பெற்றன.

குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் வரலாகியது. பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். சமீபத்தில் நடிகை நஸ்ரியா வாத்தி கமிங்கிற்கு நடனம் ஆடி வீடியோவை பகிர்ந்துள்ளார். தோழி ஒருவருடன் நஸ்ரியா செம குத்தாட்டம் போட்டிருக்கும் ஆட்டம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறது. படத்தில் விஜய்யின் பிரபலமான தோள்பட்டை மூவ்மெண்ட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார் நஸ்ரியா.

வழக்கமாக தல அஜீத் படம் பற்றியே பாராட்டி மெஜ்சேஜ்கள் பதிவிடும் நஸ்ரியா தற்போது தளபதி விஜய் பாட்டுக்கு நடனம் ஆடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.நஸ்ரியா தமிழ் படத்தில் நடித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும், தமிழ்ப் பாட்டை மறக்காமல் கேட்டுப் போட்டிருக்கும் ஆட்டம் அவருக்குத் தமிழ் ரசிகர்களிடமிருந்து பாராட்டை பெற்றுத்ததந்துள்ளது.விஜயின் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

More News >>