கங்கனா ரனாவத் மீதான புகார் விவகாரம்: பிரபல நடிகர் வாக்குமூலம்

நடிகை கங்கனா ரானவத் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஒரு காலகட்டத்தில் நெருக்கமாக இருந்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். நடிகை கங்கனா, ஹிருத்திக் மீது சரமாரி புகார் கூறினார். தனக்கு மெசேஜ் அனுப்பி குழப்பம் ஏற்படுத்தியதாகவும் கூறினார். ஆனால் ஹிருத்திக் இதனை மறுத்தார். தன் பெயரில் யாரோ இதுபோல் செய்திருக்கிறார்கள். கங்கனாவுக்கு நான் மெசேஜ் அனுப்பவில்லை என்றதுடன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, வார் பட நடிகர் ஹிருத்திக்கிற்கு மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு ஆன்லைன் ஆள்மாறாட்டம் வழக்கில் தனது வாக்குமூலம் பதிவு செய்யக் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு ரித்திக் ரோஷன் இன்று வந்தார்.நடிகை கங்கனா ரனாவத் தனது பெயரில் ஒரு போலி மின்னஞ்சல் ஐடியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பியதாகவும் குற்றம் சாட்டி புகார் கூறியிருந்தார். மின்னஞ்சல்கள் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது அப்போது கங்கனா ரனாவத் தனக்கு நூற்றுக்கணக்கான அபத்தமான மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக ரித்திக் கூறியிருந்தார். 2016 ஆம் ஆண்டில், சைபர் செல் ரோஷனின் மடிக்கணினி மற்றும் தொலைப்பேசியை விசாரணைக்கு எடுத்துச் சென்றது.

இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் அதிகாரிகள் முன் ஹிருத்திக் ஆஜரானார். 2020 டிசம்பரில், ரோஷனின் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி நிலுவையில் உள்ள இதுதொடர்பான விசாரணை பற்றி மும்பை போலீஸ் கமிஷனரை அணுகியிருந்தார், அதன் பின்னர் இந்த வழக்கு குற்றப்பிரிவின் சி.ஐ.யுவுக்கு மாற்றப்பட்டது.சமீபகாலமாக கங்கனா ரனாவத் தொடர் சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகிறார். மத உணர்வைத் தூண்டி மோதல் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தாக அவர் மீது ,மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னதுடன் அவர்களைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டார். இதை எதிர்த்து அவருக்கு எதிராக நெட்டிஸன்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் கங்கனாவின் படப்பிடிப்பு நடந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்துத் தாக்கியதாகக் கூறப்பட்டது.

More News >>