சிம்புவின் மிரர் இமேஜ் வைரல்..
நடிகர் சிம்பு சில காலம் இணையதள டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகி இருந்தார்.ஆனாலும் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக சிம்புவின் தகவல்களைத் பகிர்ந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தின் ஊரடங்கு தளர்வில் சிம்பு மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் இணைந்தார். அதில் தான் நடிக்கும் படங்கள், பொது கருத்துக்கள், மற்ற பணிகள் பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு ஒரு புகைப்படம் பகிர்ந்தார். கண்ணாடி சிம்பு ஸ்டைலாக நிற்கும் அப்படம் கருப்பு மற்றும் வெள்ளையில் பகிரப்பட்டது. "எல்லாம் கருப்பு & வெள்ளை அல்ல 😎 #atman #silambarasantr #blackandwhite (sic)."என குறிப்பிட்டிருந்தார்.சிம்புவின் இந்த புத்தகத்தைப்படத்தை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாகிவிட்டனர். சமீபத்தில், காதலர் தினத்தில் நடிகர் மஹத்தின் செல்லப்பிள்ளையான கோகோவுடன் சிம்பு பேசிய வீடியோ ஒன்று வைரலானது.
சிம்பு தனது புதிய தோற்றத்தில் பொருத்தமாகவும் அழகாகவும் ஸ்லிம்மாகவும் இருக்கிறார். மேலும் இந்த வடிவம் பெறக் கிட்டத்தட்ட 30 கிலோ எடையை அவர் குறைத்தார். அதன்மூலம் பலருக்கு உடற்பயிற்சி இலக்குகளை ஏற்பட வைத்தார்.கடந்த ஜனவரியில் சிம்பு நடிக்க சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் பட, திம்ரைக்கு வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சிம்புவின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்கள் வெங்கட் பிரபு தனது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மாநாடு படத்தின் டீஸரை வெளியிட்டார். ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் டீசரின் தமிழ் பதிப்பை வெளியிட, பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் இந்தி பதிப்பை வெளியிட்டார்.
தற்போது சில்லுனு ஓரு காதல் பட புகழ் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்கிறார் சிம்பு. அதன்படப்பிடிப்பு நடந்து வருகிறது, மேலும் அவர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஒரு படத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தலைப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையாடா படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இப்படம் மூலம் சிம்பு, கவுதம் மேனன், மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகின்றனர்.