முககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..
நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய பாய்ஃப்ரண்ட் சந்தானு ஹசாரிகா. சமீபத்தில் இவர்களின் நட்பும் காதலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. ஏற்கனவே இவர்களின் படங்கள் நெட்டில் வெளியாகிப் பரபரப்பானது. இந்நிலையில் இருவரும் ஜோடியாகச் சென்னை வந்தனர்.சந்தானுவுடன் ஜோடியாக நிற்கும் படங்களை ஸ்ருதிஹாசன் தனது இணைய தள பக்கத்தில் பகிர்ந்தார். இருவரும் பிரி்ண்ட் செய்யப்பட்ட படத்துடன் கூடிய முகமூடிகளை அணிந்திருக்கின்றனர். மேலும் தனது தந்தை கமல்ஹாசனைச் சந்தித்த படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.
முன்னதாக கொரோனா காலகட்டத்தில் மும்பையில் தனது தனிமை பொழுதைக் கழித்தார் ஸ்ருதி. 8 மாதங்களுக்குப் பிறகு லாபம் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வரவே அதில் பங்கேற்று நடித்தார். பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். ரவி தேஜாவுடன் அவர் நடித்த கிராக் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படம் விரைவில் தமிழில் திரைக்கு வரவுள்ளது.ஸ்ருதிஹாசன் தற்போது புதிய பாய்ஃபிரண்டுடன் பழகி வருகிறார். ஸ்ருதியின் பிறந்த நாளன்று அவர் வாழ்த்து கூறினார். ஸ்ருதியும் தனக்கு புதிய காதல் மலர்ந்திருப்பதாகச் சமீபத்தில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
ஸ்ருதியின் புதிய பாய்ஃபிரண்ட் ஹசாரிகா அசாம் மாநிலம் கவுஹாத்தியை சேர்ந்தவர். ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட். தங்கள் இருவருக்குமான நட்பு பற்றி ஹசாரிகா தெரிவித்தார். அவர் கூறும் போது,எங்கள் இருவரை ஒன்றிணைத்தது கலைதான். கலை தொடர்பாக இருவரும் சந்தித்தோம். எனக்கும் ஸ்ருதியை போலவே கலை மற்றும் இசையில் ஆர்வம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் இருவரது ரசனையும் ஒன்று தான். அவர் எழுதிய அழகான கவிதை ஒன்றுக்கு நான் படமும், விஷுவலும் செய்து கொடுத்தேன். இதுதான் அதிகாரப்பூர்வமில்லாத எங்கள் கூட்டணி பணி. எங்கள் இருவருக்கும் வலுவான ஓவியபந்தம் இருக்கிறது. ஆக்கப்பூர்வமான திட்டங்களில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றார்.