எங்களின் வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது - டி.டி.வி.தினகரன்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் நாமக்கலில் மாவட்ட, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமமுக தலைவரும் ஆர்.கே.நகரின் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன், ‘வரபோகும் தேர்தலில் தங்கள் வெற்றியைத் தடுக்க யாராலும் முடியாது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “காவிரி வாரியம் அமைக்கப்பட்டால் தான் தமிழக மக்களின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ள காவிரி நீரை பெற முடியும் என்ற தமிழக மக்களின் உணர்வை மதிக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் காவிரி கரையோர மாவட்ட மக்கள் போராட்டி வருக்கின்றார்கள்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்களைப் பாதிக்கின்ற திட்டத்தைத் தமிழகம் அனுமதித்தது இல்லை. இப்போது நடைபெரும் ஆட்சி மத்திய அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு மக்கள் பிரச்னையில் கண்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர்.” என்றார்.

More News >>