உருவாகிறது மூன்றாவது அணி?

அ.தி.மு.க-பி.ஜே.பி இடையே தொகுதி பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் விரைவில் 3-ஆவது அணி அமையும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 6 தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் நாள் . இந்த தேதி அறிவிக்கப்பட்டதுமே அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்து விட்டன. கூட்டணி பேரங்கள் திரைமறைவில் நடந்துகொண்டிருக்க அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளில் என்ற ஒரே ஒரு உறுதியான தகவல் மட்டுமே அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியின் பிரதான இன்னொரு கட்சியான பாரதிய ஜனதாவுக்கு எத்தனை சீட்டு என்பது இந்த நிமிடம் வரை இறுதி செய்யப்படாமல் நீடித்துக் கொண்டிருக்கிறது. சசிகலாவை அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக நிபந்தனை விதிப்பது தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு இரவு அதிமுக சார்பில் அமித்ஷாவுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது அந்த விருந்தில் கலந்துக் கொண்ட முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ்சிடம், டி.டி.வி தினகரனுக்கு 20 தொகுதிகள் தரும் படி அமித்ஷா தெரிவித்தாராம். டி.டி.வி தினகரனை சேர்க்கும்படி யோ அல்லது அவருக்கு சீட் கொடுக்கும்படி யோ பிரதமர் மோடி எங்களிடம் சொல்லவில்லையே என்று முதல்வர் இ.பி.எஸ் அமித்ஷாவிடம் சற்று அழுத்தமாகவே சொல்லியிருக்கிறார். இதில் கடுப்பாகிப்போன அமீத் ஷா ஒஹோ. அப்ப பிரதமரிடம் பேசிவிட்டு சொல்றேன் என்ற இரவோடு இரவாக டெல்லி சென்றுவிட்டார் இதனால்தான் இழுபறி நீடிக்கிறது இன்று ஒரு தகவல் உலா வருகிறது. சசிகலா தரப்பை கூட்டணியில் சேர்ப்பது மிகப்பெரிய தர்மசங்கடத்திற்கு வழிவகுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி நினைக்க.. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமோ அதை அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்துள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார்.

அவருடன் பாரிவேந்தர் உட்பட மேலும் பல சிறிய கட்சிகள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் எதிர்பார்க்கப்படும் இன்னொரு பிரதான கட்சி தேமுதிக. விஜயகாந்தின் உடல்நலக்குறைவு பிறகு கட்சி பெரிய அளவில் சோபிக்க வில்லை என்பதால் ஒற்றை இலக்கத்தில் அந்த கட்சிக்கு சீட்டு ஒதுக்கப்பட வேண்டும் என்று அதிமுக தலைமை நினைக்கிறது. தாங்கள் ஓரங்கட்ட படுகிறோம் என்பதை உணர்ந்த தேமுதிக நிர்வாகிகள் தேவைப்பட்டால் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று முழங்கி இருக்கிறார்கள். அதிமுக அணியில் தேமுதிகவிற்கு கேட்ட இடங்கள் கிடைக்காவிட்டால் கட்சி தனித்து விடப்படும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த கட்சியை இழுத்து இழுத்து கமலஹாசன் தலைமையிலான கட்சியுடன் இணைத்து மூன்றாவது அணியை உருவாக்க ஒரு சிலர் திட்டமிட்டு வருகின்றனர் இதற்கான திரைமறைவு வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. மூன்றாவது அணி அமையுமா பார்ப்போம் கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்...

More News >>