பாகுபலி நடிகை தொடங்கிய நடிப்பு கல்விக்கூடம்..
பிரபாஸ் அனுஷ்கா நடித்த பாகுபலி படத்திலும் கார்த்தி, தமன்னா நடித்த தோழா படத்திலும் கவர்ச்சி நடனம் ஆடியவர் நோரா பதேஹி. பாரத், பாட்டிய ஹவுஸ், ஸ்ட்ரீ போன்ற பல இந்தி படங்களிலும் இவர் கவர்ச்சி நடனம் ஆடி புகழ் பெற்றவர். பெரும்பாலும் இவர் கவர்ச்சி பாடல்களுக்கு மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார். முழு நீள கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது 2 இந்தி படங்களில் நடிக்கிறார். நோரா தற்போது நடிப்பு சொல்லித்தரும் அகடமி ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதில் திரைப்படத்துக்கு நடிகைகளை தயார்படுத்தும் நிலையமாக இந்நிறுவனம் செயல்படும். பாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நோரா பதேஹி.
இவரும் தோனி பட நடிகை திஷா பதானியும் நெருங்கிய தோழிகள். இவர்களுக்குள் நட்பு மலர்ந்தது ஒரு ருசிகரமான விஷயம். இரண்டு நடிகைகளும் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளனர், மேலும் அவர்களது ரசிகர்களிடமிருந்து அபரிமிதமான புகழையும் அன்பையும் அனுபவித்து வருகின்றனர். அவர்களின் நடனம் மற்றும் ஒர்க்அவுட் வீடியோக்கள் எப்போது வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகின்றன. தங்களது அன்றாட செயல் பாடுகளையும் புதுப்பிப்புகளை தவறாமல் செய்கின்றனர். இதன் மூலம் இருவரும் தங்கள் ரசிகர்களை கவர்ந்திழுத்து தக்க வைத்திருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு திஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை நோரா நெட்டில் பகிர்ந்தார்.
அதில் இருவரும் சேலைகளில் தோன்றுகின்றனர். அந்த படத்தில் 'எம்.எஸ் தோனி' திஷா பதானிக்கு நடிகைக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்த தருணத்தை கைப்பற்றி பகிர்ந்துள்ளார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நோரா வந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு 6 கெஜம் சேலை அணிய வேண்டி இருந்தது. நோராவுக்கோ சேலை கட்டத் தெரியாது என்ன செய்வதென்று தெரியாமல் திணறினார். அப்போது அவரது நிலைமையை புரிந்து கொண்ட திஷா உதவிக்கு சென்றார் நோராவுக்கு சேலை கட்டிவிட்டதுடன் எப்படி கட்ட வேண்டும் என்று சொல்லியும் தந்தார். அந்த நிகழ்வை பகிர்ந்த நோரா என்னுடைய உயிர் காத்தவர் என்று அவரை பாராட்டினார்.